Monday, 21 May 2018
Sunday, 20 May 2018
Friday, 18 May 2018
Monday, 14 May 2018
தேவதையே! வா.. வா..
நீயும் நிலவும் ஒன்றுதான்
இருவரும் தூர இருந்தே
எழில்முகம் காட்டுவதல்!
நீயும் கடலும் ஒன்றுதான்
இருவரும் சுனாமியை
ஒளித்து வைத்துள்ளதால்!
நீயும் வானும் ஒன்றுதான்
இருவரும் நான் தொடமுடியாத
தூரத்தில் இருப்பதால்!
நீயும் தேவதையும் ஒன்றுதான்
இருவரும் கனவில் மட்டுமே
என்னோடு வருவதால்!
நீயும் மழையும் ஒன்றுதான்
இருவரும் எதிர்பாராமல்
அன்பைப் பொழிவதால்!
Sunday, 13 May 2018
"அம்மாவும் என் கிராமமும்"
அம்மா!
பணம் பணம் என்று ஓடி வந்தேன்
ஊரைவிட்டு உறவைவிட்டு உன்னையும் விட்டு
உன்னை நினைக்க நான் மறந்திருந்தேன்
என்னை மறக்க நீ மறந்திருந்தாய்
அன்பு என்றால் அது அம்மாதான்
அது யாரும் சொல்லாமல் தெரியும்
நீ படும் துயரங்கள் அது பிறர் சொல்லித்தான் தெரியும்
அன்று, அன்போடு நீ கொடுக்கும் பழைய சோறுகூட இனிக்கும்
இன்றோ! சுடச்சுட சாப்பிடும் உயர்தர உணவுகூட கசக்கிறது
அன்று நீ என் கையில் கொடுத்தனுப்பிய ஒரு நூறுதான்
இன்று பல ஆயிரங்களாய் என் பையில் கிடக்கிறது
நலமாய் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையோடு
நாளும் நான் வாழ்கிறேன்
இடியாய் செய்தியைக் கேட்கும்வரை
உன் உடல் நிலைமோசமென்ற
தீ சொல் கேட்டே நான் துடிதுடிதுப்போனேன்
உன் வார்த்தை கேட்டபின்தான்
கொஞ்சம் நிம்மதியானேன்
ஆறுமணிக்குமேல் ஆள்அறவமற்றுக் கிடக்கும் தெருக்களும்
நல்லிரவில் உலாவரும் ஐயனார் குதிரையும்
விடியும்போது கூவும் சேவலும்
விடிந்தபின் போடும் ஆற்றுக் குளியலும்
கண்ணுக்கழகான நெல்வயல் பசுமையும்
புல்மேயும் ஆடுமாடுகளும்
வெள்ளந்தியான உள்ளங்களின் நேச விசாரிப்பும்
வெளுக்கும் வெயிலும்
விட்டுவிட்டு வந்து
இங்கு என்ன சுகம் கண்டேன்
இனியும் வேண்டாம் இந்த நகரத்தில் நரகம்
வேண்டும் இனி நம் கிராமத்து சொர்க்கம்
எனக்கும் என் அறிவுக்கும் அடைக்கலம் கொடுத்த
இந்த நகரத்திற்கு
வருவேன் மீண்டும் இந்த கிராமத்துக் குயில்...
அன்பான அம்மாவோடும் கிராமத்து வாசத்தோடும்!
Saturday, 12 May 2018
மழலை அழகு!
தத்தித்தத்தி நடை பயிலும்
தாமரைப் பாதம் அழகா
காற்றில் அலைந்திடும்
வாழைத்தண்டு கைகள் அழகா
துளிர்க்கும் தளிர்போல
பட்டுமேனி அழகா
கருவிழியில் அசைந்திடும்
துருதுரு பார்வை அழகா
தேனாக இனித்திடும்
மழலைக்குரல் அழகா
சொக்கிப்போய் நிற்கின்றேன்
என் தங்கமே உன் அழகில்!!
சொல்ல வார்த்தை இல்லை
என் செல்லமே உன் பேரழகு!!
Friday, 11 May 2018
Wednesday, 9 May 2018
அற்புதம்! அற்புதம்!
உயர உயர
வளர்ந்தாலும்
தலைக்கனமில்லை
தழைத்து செழித்து
பெருத்தாலும்
தளர்ச்சியில்லை
குளிர்காற்றால்
மனதை குளிர்விக்கும்
குளிர்மழையும்
இதனால் உருவாகும்
இலை தழையால்
மண்ணும் செழிக்கும்
பறவைகளும் விலங்குகளும்
அண்டிப்பிழைக்கும்
ஒசோனையும் காக்கும்
உயிர்க்காற்றை பெருக்கும்!
காலங்கள் பலகடந்தாலும்
பயன்கள் சேர்க்கும்!
மரங்களே அற்புதம்!
மரங்களே அற்புதம்!
Tuesday, 8 May 2018
Monday, 7 May 2018
என் அன்பு தேவதையே!
ஒரு நொடி,
உன் விழி
என் விழியோடு பேசும்!
அந்நாளின்
ஒவ்வொரு நொடியும்
என் மனம்
உன் மனதோடு பேசும்..
ஒரு சொல்லில்
உன் உதடுகளில்
நான் இருப்பேன்!
அந்நாளின்
ஒவ்வொரு சொல்லிலும்
என் செவியில்
நீ இருப்பாய்..
ஒரு அசைவில்
என் உடமைகளில்
உரசி செல்வாய்!
அந்நாளின்
ஒவ்வொரு அசைவுகளும்
என் இதயத்தில்
தடம் பதிக்கும்..
ஒரு சிரிப்பில்
என் உள்ளம்
கவர்ந்து செல்வாய்!
அந்நாளின்
ஒவ்வொரு சிரிப்பிலும்
நீயாகவே
நிறைந்திருப்பாய்..
உந்தன் உயிரை
நேசித்தேன்
எந்தன் உயிருக்குள்
உனை வைத்தேன்
எனை நீ ஏற்பாயோ..
என் அன்பு தேவதையே!
Sunday, 29 April 2018
உன்னோடு மட்டுமே!
பிடிக்கவில்லை என்றாய்!
இரண்டாம் முறை
முன்பே உன்னிடம்
சொல்லிவிட்டேனே என்றாய்!
மூன்றாம் முறை
எதுவும் சொல்லவுமில்லை!
என்னை கொல்லவுமில்லை!
உன் விழிப்பார்வைகளை
பார்த்தும் சாகிறேன்!
பார்க்காமலும் சாகிறேன்!
உன் இனிய பேச்சுகளை
கேட்டும் சாகிறேன்!
கேட்காமலும் சாகிறேன்!
உன் கனவுகளோடு
என் இரவுகள் விடியும்!
உன் நினைவுகளோடு
என் பகல்கள் உறையும்!
உனக்கான காத்திருப்பு
உயிர்கொல்லும்
சுகமாகிப்போனது எனக்கு!
உனக்கான பரிதவிப்பு
மனங்கொல்லும்
இரனமாகிப்போனது எனக்கு!
பித்தாகிக் கிடக்கின்றேன்!
பைத்தியமாய் அலைகின்றேன்!
உணர்வுக்குள் உனை வைத்தேன்!
உயிருக்குள் உனை தைத்தேன்!
வேண்டும் நீயே வேண்டும்!
உன்னோடு மட்டுமே
வாழ்வெனக்கு வேண்டும்!
என் அன்பே! என்னுயிரே!
எதனால் என்னை
பிடிக்கிறது என்றாய்?
என்னவோ..
பிடிக்கிறது உன்னை!
எதுவோ..
இருக்கிறது உன்னில்!
கன்னக் குழியழகில்
விழுந்துவிட்டேனோ?
மஞ்சள் நிரத்தழகில்
மயங்கிவிட்டேனோ?
அதிராத பேச்சழகில்
அடங்கி விட்டேனோ?
ஆம்! ஆம்! ஆம்!
எல்லாமும் தான்!!
இருந்தாலும்..
ஆண் பெண் பாராமல்,
நட்போடு பழகுவதும்
யாரையும் புண்படுத்தாமல்,
அன்போடு எண்ணங்களை
வெளிப்படுத்துவதும்..
முகம் சுளிக்காமல்,
வேலைப்பளு ஏற்பதிலும்
துன்பத்தில் துவளாமல்,
அன்பாகப் பேசுவதும்..
எல்லோரிடத்திலும்,
அக்கறையோடு இருப்பதிலும்
இப்படி..
உனக்கான அடையாளங்கள்
என் மனதில் ஏராளம்!
என் அழகே! என்னவளே!
என் அன்பே! என்னுயிரே!
என் இதயம் நீயடி!
என் உயிரும் நீயடி!
Friday, 27 April 2018
அன்பே! உன் வாசம்...
அலைபாயும்...
உன்கூந்தலின் புதிய வாசம்!
அவசர நடைபயனங்களின்
இளைப்பாரலில்...
அரும்பிடும் துளிகளின் வாசம்!
அந்தசில தினங்களில் மலரும்
உந்தன் தணித்துவ...
உயிரின் வாசம்!
திருவிழா காலங்களில் பளிசிடும்
அழகிய நெகங்களின்...
வண்ணப்பூச்சு வாசம்!
சிலஅற்புத தருணங்களில் புடவையோடு
உம் பெண்மையின்...
இனிய வாசம்!
எப்பொழுதும் என் மனதோடு
உன் வாசம்!!.. உன் வாசம்!!..
முப்பொழுதும் என் நெஞ்சோடு
உன் நேசம்!!,, உன் நேசம்!!..
அழகே!.. அழகே!..
தத்தத்தி நடை பயிலும்
தாமரைப் பாதம் அழகா?
காற்றில் அலைந்திடும்
வாழைத் தண்டு கைகள் அழகா?
துளிர்க்கும் தளிர்போல
பட்டு மேனி அழகா?
கருவிழி அசைந்திடும்
துருதுரு பார்வை அழகா?
தேனாக இனிதேடும்
மழலைக் குரல் அழகா?
சொக்கிபோய் நிற்கின்றேன்
என் தங்கமே உன் அழகில்..!!
சொல்ல வார்த்தை இல்லை
என் செல்லமே உன் பேரழகு..!!
Subscribe to:
Posts (Atom)























