Monday, 30 April 2012

தமிழே! தேன் தமிழே!


எந்தன் தமிழே!

இனிய காதலே! 

எங்கள் தமிழே!

இனிய உயிரே!

 

என்றும் புதுமை அழகு!

எந்நாளும் பழமை அழகு!

கவி இளமை அழகு!

கருத்து வலிமை அழகு!

பழக எளிமை அழகு!

பண்பு முதுமை அழகு!

சொல் செழுமை அழகு!


எந்தன் தமிழே!

எங்கள் தமிழே!

நாளும் நாளும்

நீ அழகோ அழகு..!!

நீ அழகோ அழகு..!!

நேற்றைய வரலாறு

எங்கள் தமிழ்! 

இன்றைய ஒளி

எங்கள் தமிழ்!!


தமிழ் வெல்லும்!

தமிழ் வெல்லும்! 

எங்கு மெங்கும்..

எங்கு மெங்கும்..

இன்பத்தமிழ்

வெல்லும்!!

இன்பத்தமிழ்

வெல்லும்!!