Friday, 27 April 2018

அன்பே! உன் வாசம்...

சில வெள்ளிகிழமைகளில்
அலைபாயும்...
உன்கூந்தலின் புதிய வாசம்! 

அவசர நடைபயனங்களின்
இளைப்பாரலில்...
அரும்பிடும் துளிகளின் வாசம்! 

அந்தசில தினங்களில் மலரும் 
உந்தன் தணித்துவ...
உயிரின் வாசம்! 

திருவிழா காலங்களில் பளிசிடும் 
அழகிய நெகங்களின்...
வண்ணப்பூச்சு வாசம்! 

சிலஅற்புத தருணங்களில் புடவையோடு 
உம் பெண்மையின்...
இனிய வாசம்! 

எப்பொழுதும் என் மனதோடு
உன் வாசம்!!.. உன் வாசம்!!..
முப்பொழுதும் என் நெஞ்சோடு
உன் நேசம்!!,, உன் நேசம்!!..

No comments:

Post a Comment