Monday, 21 May 2018

நீ வருவாயா மனசுக்குள்ளே!


காலை தென்றலாக

நீ தீண்டுகின்றாய்..

மதிய நினைவாக

நீ வருக்கின்றாய்..

மாலை சூரியனாக

நீ மயக்குகின்றாய்..

இரவு நிலவாக

நீ குளிர்கின்றாய்..

என்னவளாக

நீ இருப்பதெப்போது?

Sunday, 20 May 2018

அசைக்கிறாய் என்னை!


கண்ணசைத்து

கையசைத்து

தலையசைத்து

நீ பேசும் பேச்சுக்கள்

அசைவற்று கவணிக்கவைக்கும்!

நீ பேசும் கதைகளெல்லாம்

கேட்டபின்பும்

உன் அசைவுகளின் தாளங்களுக்காகவே

மீண்டும் மீண்டும்

கேட்கத்துண்டும் என்மனது!

Friday, 18 May 2018

உனக்கே உனக்காக!


உன் கவிதைப்பார்வை

எனக்கே எனக்காக!

என் காவிய மனசு

உனக்கே உனக்காக!

உன் செல்லச்சிரிப்பு

எனக்கே எனக்காக!

என் அன்பு இதயம்

உனக்கே உனக்காக!

உன் ஆசைப்பேச்சு

எனக்கே எனக்காக!

என் உயிரின்மூச்சு

உனக்கே உனக்காக!

உன் அன்புமுழுவதும்

எனக்கே எனக்காக!

என் வாழ்க்கைமுழுவதும்

உனக்கே உனக்காக!

Monday, 14 May 2018

தேவதையே! வா.. வா..



நீயும் நிலவும் ஒன்றுதான்
இருவரும் தூர இருந்தே
எழில்முகம் காட்டுவதல்!
நீயும் கடலும் ஒன்றுதான்
இருவரும் சுனாமியை
ஒளித்து வைத்துள்ளதால்!
நீயும் வானும் ஒன்றுதான்
இருவரும் நான் தொடமுடியாத
தூரத்தில் இருப்பதால்!
நீயும் தேவதையும் ஒன்றுதான்
இருவரும் கனவில் மட்டுமே
என்னோடு வருவதால்!
நீயும் மழையும் ஒன்றுதான்
இருவரும் எதிர்பாராமல்
அன்பைப் பொழிவதால்!

Sunday, 13 May 2018

"அம்மாவும் என் கிராமமும்"



அம்மா!
பணம் பணம் என்று ஓடி வந்தேன்
ஊரைவிட்டு உறவைவிட்டு உன்னையும் விட்டு
உன்னை நினைக்க நான் மறந்திருந்தேன்
என்னை மறக்க நீ மறந்திருந்தாய்
அன்பு என்றால் அது அம்மாதான்
அது யாரும் சொல்லாமல் தெரியும்
நீ படும் துயரங்கள் அது பிறர் சொல்லித்தான் தெரியும்
அன்று, அன்போடு நீ கொடுக்கும் பழைய சோறுகூட இனிக்கும்
இன்றோ! சுடச்சுட சாப்பிடும் உயர்தர உணவுகூட கசக்கிறது
அன்று நீ என் கையில் கொடுத்தனுப்பிய ஒரு நூறுதான்
இன்று பல ஆயிரங்களாய் என் பையில் கிடக்கிறது
நலமாய் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையோடு
நாளும் நான் வாழ்கிறேன்
இடியாய் செய்தியைக் கேட்கும்வரை
உன் உடல் நிலைமோசமென்ற
தீ சொல் கேட்டே நான் துடிதுடிதுப்போனேன்
உன் வார்த்தை கேட்டபின்தான்
கொஞ்சம் நிம்மதியானேன்
ஆறுமணிக்குமேல் ஆள்அறவமற்றுக் கிடக்கும் தெருக்களும்
நல்லிரவில் உலாவரும் ஐயனார் குதிரையும்
விடியும்போது கூவும் சேவலும்
விடிந்தபின் போடும் ஆற்றுக் குளியலும்
கண்ணுக்கழகான நெல்வயல் பசுமையும்
புல்மேயும் ஆடுமாடுகளும்
வெள்ளந்தியான உள்ளங்களின் நேச விசாரிப்பும்
வெளுக்கும் வெயிலும்
விட்டுவிட்டு வந்து
இங்கு என்ன சுகம் கண்டேன்
இனியும் வேண்டாம் இந்த நகரத்தில் நரகம்
வேண்டும் இனி நம் கிராமத்து சொர்க்கம்
எனக்கும் என் அறிவுக்கும் அடைக்கலம் கொடுத்த
இந்த நகரத்திற்கு
வருவேன் மீண்டும் இந்த கிராமத்துக் குயில்...
அன்பான அம்மாவோடும் கிராமத்து வாசத்தோடும்!

Saturday, 12 May 2018

மழலை அழகு!



தத்தித்தத்தி நடை பயிலும்

தாமரைப் பாதம் அழகா

காற்றில் அலைந்திடும்

வாழைத்தண்டு கைகள் அழகா

துளிர்க்கும் தளிர்போல

பட்டுமேனி அழகா

கருவிழியில் அசைந்திடும்

துருதுரு பார்வை அழகா

தேனாக இனித்திடும்

மழலைக்குரல் அழகா

சொக்கிப்போய் நிற்கின்றேன்

என் தங்கமே உன் அழகில்!!

சொல்ல வார்த்தை இல்லை

என் செல்லமே உன் பேரழகு!!

கவிதையின் கவிதையே!


விரியும் இமைதிரைக்குள்ளே

கவிபேசும் கருவிழிகள்!

ரோஜா இதழ்களுக்குள்ளே

தேன் சிந்தும் வார்த்தைகள்!

அழகான இதயத்திற்குள்ளே

அன்பான சிந்தனைகள்!

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்

என் இதயத்தில்

கவிதை பொங்கும்!

கவிதையே!..

என் கவிதையின் கவிதையே!

Friday, 11 May 2018

நீயே! நீயே!



கணினியும் நீயே!

கணினித்திரையும் நீயே!

தட்டச்சு பலகையும் நீயே!

சொடுக்கியும் நீயே!

எழுத்துக்களும் நீயே!

என் தொடுதிரையிலும் நீயே!

என் தேடுதலெல்லாம் நீயே!

என் முகப்புத்தகமெல்லாம் நீயே!

என் எண்ணமெல்லாம் நீயே!

என் வாழ்வின் வண்ணமெல்லாம் நீயே!

Wednesday, 9 May 2018

அன்பே உன்னை பார்த்ததால்!



உச்சி வெயில்

உன்னை பார்த்ததால்

தென்றல் மாலையானது

நடுங்கும் குளிர்

உன்னை பார்த்ததால்

கதகதப்பான இளம்பகலானது

கொட்டும் மழை

உன்னை பார்த்ததால்

பனிவிழும் காலையானது

கோடை மழை

உன்னை பார்த்ததால்

மார்கழி வெய்யிலானது

என் அன்பே!

உன்னை பார்த்ததால்

என் இதயக்கல்

அழகு பூந்தோட்டமானது!

அற்புதம்! அற்புதம்!



உயர உயர

வளர்ந்தாலும்

தலைக்கனமில்லை

தழைத்து செழித்து

பெருத்தாலும்

தளர்ச்சியில்லை

குளிர்காற்றால்

மனதை குளிர்விக்கும்

குளிர்மழையும்

இதனால் உருவாகும்

இலை தழையால்

மண்ணும் செழிக்கும்

பறவைகளும் விலங்குகளும்

அண்டிப்பிழைக்கும்

ஒசோனையும் காக்கும்

உயிர்க்காற்றை பெருக்கும்!

காலங்கள் பலகடந்தாலும்

பயன்கள் சேர்க்கும்!

மரங்களே அற்புதம்!

மரங்களே அற்புதம்!

பூவின் புன்னகை!


பூப்போலநீசிரிக்கும்அழகு பார்க்க..தேன் தேன்!மனதுக்குள்தேன் தேன்!கோடி என்ன கோடி?நீ தான்எனக்கு கோடி!என் கண்மணியே!எங்கள் செல்லமே!

விற்பனைக்கு..



பூமியே ஒரு
விற்பனை நிலையம்
இங்கு எல்லாமும்
விற்கப்படும்
எல்லாமும்
வாங்கப்படும்
வேண்டும் எதுவும்
வாங்கிக்கொள்
வேண்டாத எதையும்
விற்றுவிடு
நல்லதை விற்றால்
நாடு உன்னை பேசும்!
தீயதை விற்றாலும்
நாடு உன்னை பேசும்?
நன்மையை
நல்லதை
விற்றுப் பழகுவோம்!
அன்பும்
ஆனந்தமும்
வந்து சேரும்!

Tuesday, 8 May 2018

தவிக்கிறேன்!


தனிமையில்
தவிக்கிறேன்!
தினமுன்னை
நினைக்கிறேன்..
உயிருக்குள்
துடிக்கிறேன்
உனக்காகவே
உயிர்
வளர்க்கிறேன்..

காதலாகி
இணைந்திட
கவிதையாகி
கலந்திட
கரம்பிடித்து வா
வாழ்வெங்கும்..
என்னவளே!
என்னுயிரே!
வா! வா!..

இடந்தருவாயா மனசுக்குள்ளே!



கண்களில்
சிரிக்கின்றாய்
உதடுகளில்
மணக்கின்றாய்
பவ்ய முகம்காட்டி
மனதுக்குள்
இடம் பிடிக்கிறாய்!
உன் சின்னச்சிரிப்பிற்கு 
என் சிந்தனைகளை
கொடுத்தேன்..
உன் உதடுச்சொல்லுக்கு 
என் உலகையே
கொடுத்தேன்..
உன் இதயத்தில் 
என் நினைவுகளுக்கும்
கொஞ்சம் இடந்தருவாயா?

Monday, 7 May 2018

நீ எங்கே என் அன்பே!


அன்பே! அன்பே!
எங்கிருக்கிறாய்? 
எந்தன் இதயத்தின்
உள்ளிருக்கிறாய்! 
அழகே! அழகே!
எங்கிருக்கிறாய்? 
எந்தன் மனதில்
குடியிருக்கிறாய்! 
அறிவே! அறிவே!
எங்கிருக்கிறாய்? 
எந்தன் மூளைகுள்
அமர்ந்திருக்கிறாய்! 
உயிரே! உயிரே!
எங்கிருக்கிறாய்? 
எந்தன் உடலில்
கலந்திருக்கிறாய்!

என் அன்பு தேவதையே!





ஒரு நொடி, 
உன் விழி
என் விழியோடு பேசும்! 
அந்நாளின்
ஒவ்வொரு நொடியும்
என் மனம்
உன் மனதோடு பேசும்..

ஒரு சொல்லில்
உன் உதடுகளில்
நான் இருப்பேன்! 
அந்நாளின்
ஒவ்வொரு சொல்லிலும்
என் செவியில்
நீ இருப்பாய்..

ஒரு அசைவில்
என் உடமைகளில்
உரசி செல்வாய்!
அந்நாளின்
ஒவ்வொரு அசைவுகளும்
என் இதயத்தில்
தடம் பதிக்கும்..

ஒரு சிரிப்பில்
என் உள்ளம்
கவர்ந்து செல்வாய்!
அந்நாளின்
ஒவ்வொரு சிரிப்பிலும்
நீயாகவே
நிறைந்திருப்பாய்..

உந்தன் உயிரை
நேசித்தேன்
எந்தன் உயிருக்குள்
உனை வைத்தேன்
எனை  நீ ஏற்பாயோ..
என் அன்பு தேவதையே!